‘சூர்யா 44’ படத்தின் வில்லன்.. படக்குழு கொடுத்த அப்டேட்!

 
Suriya 44

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 44 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இளம் ஹீரோ கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற வெற்றப்படத்தை கொடுத்த சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் ஹாலிவுட் கலைஞர்கள் படத்திற்கு பணியாற்றி வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

நடிகர் சூர்யா, கடைசியாக கதாநாயகனாக நடித்திடிருந்த படம், எதற்கும் துணிந்தவன். இந்த படம், 2021ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெற்றிப்படமாக அமைந்தாலும், விமர்சன ரீதியாக இப்படம் தோல்விப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதே போல, மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கட்டரி படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இவர் நாயகனாக நடித்த படமும் வெளியாகவில்லை.

Suriya 44

தற்போது நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் . இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 44 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,  சூர்யா 44 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ,  ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார். சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.

Suriya 44

இன்னும் படத்தில் இணையவுள்ள பிரபலங்கள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட உள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே கசிந்து இருக்கிறது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இயக்குனரும், நடிகருமான உறியடி விஜயகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமார், படத்தின் கதையை கேட்டுவிட்டு அவருக்கு பிடித்து போக அவரும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web