‘சூப்பர்ஸ்டார் - லோகி சம்பவம் ஸ்டார்ட்’.. இன்று முதல் ‘கூலி’ படப்பிடிப்பு ஆரம்பம்!

 
Coolie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக மும்மரமாக தயாராகி வருகிறது. அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கூலி’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கிறார்.

Coolie

இந்த படம் தொடர்பான அறிவிப்பு டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகும் இந்த படமானது அதிரடி ஆக்சன் படமாக தயாராக இருக்கிறது. அதே சமயம் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தில் ரஜினி நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறார். அதன்படி தனது வில்லன் கலந்த ஹீரோயிஷத்தை கூலி படத்தில் காட்டவுள்ளார் ரஜினி.


இந்நிலையில் இன்று (ஜூலை 5) ஐதராபாத்தில் கூலி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் கூறியதாவது, ‘சூப்பர் ஸ்டார்- லோகி சம்பவம் ஆரம்பம்... கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது’ என அறிவித்துள்ளது.

From around the web