வேலைக்கேத்த கூலி கேட்ட சூப்பர் ஸ்டார்! என்ன செய்யப் போகிறது சன் பிக்சர்ஸ்?

 
Coolie Coolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது. ஆடியோ வெளியீடு விழா சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில் படத்தில் ரஜினி, லோகேஷ் கூலி (சம்பளம்) விவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 கோடி ரூபாய் லோகேஷ்க்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். படத்தின் பட்ஜெட் தொகையில் 5 கோடி ரூபாய் மிச்சப் படுத்தி தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்தும் உள்ளார் லோகேஷ். 5 மடங்கு செலவு செய்து படத்தை முடிக்காத இயக்குனர் மத்தியில் லோகேஷ் பட்ஜெட்டை மிச்சப்படுத்தியுள்ளார் என்று நாகார்ஜுனா புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்நிலையில் 25 கோடி முன்பணம் பெற்றுக் கொண்டு படத்தில் நடித்து முடித்து, டப்பிங் பேசியும் கொடுத்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வியாபாரக் கணக்குகளைப் பார்த்து முடித்து பிறகு ரஜினிக்கு 150 கோடி சம்பளம் தர கலாநிதி மாறன் முடிவு செய்துள்ளதாகவும் 200 கோடி யாக கொடுத்து விடுங்கள் என்று ரஜினி தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது.

பட வெளியீட்டுக்கு முன்னதாகவே 500 கோடிக்கு வியாபாரங்கள் முடிந்து விட்ட நிலையில் ஆயிரம் கோடி ரூபாயை கூலி படம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

From around the web