ஷாருக்கான், கமல், மம்முட்டி வரிசையில் சன்னி லியோனிக்கு கோல்டன் விசா.. ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய கௌரவம்!

 
Sunny Leone

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

Sunny-Leone

கடந்த 2021-ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். அவரை தொடர்ந்து இந்த விருது இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. துபாயில் உள்ள மிகப்பெரிய அரசு சேவை வழங்குநரான இசிஎச் டிஜிட்டலின் தலைமையகத்துக்கு சென்று சன்னி லியோன் தனது விசாவைப் பெற்றார். 


இசிஎச் சிஇஓ இக்பால் மார்கோனியிடம் இருந்து 10 வருட கால அனுமதி கொண்ட கோல்டன் விசாவுடன் கூடிய பாஸ்போர்ட்டை சன்னி லியோன் பெற்றார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரத்திற்கு சன்னி தனது நன்றியைத் தெரிவித்தார்.

From around the web