மும்பை சைபர் கிரைமில் இருந்து திடீரென வந்த சம்மன்.. அதிர்ச்சியில் நடிகை தமன்னா!
ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. ஃபேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நடிகை தமன்னாவும் இவ்வழக்கில் சிக்கியுள்ளார். அவர் ஃபேர்பிளே செயலியை விளம்பரப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்த முடிவெடுத்த மும்பை சைபர் கிரைம் போலீசார், தமன்னாவுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வியாகாம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தமன்னா ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் சார்பில் புகார் எழுப்பப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 29-ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.