பிரபல நடிகர் வீட்டில் விஷேஷம்.. பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து.. வைரலாகும் போட்டோஸ்!

 
Ramcharan

நடிகர் ராம் சரண் தனது மனைவி உபாசனாவுக்கு துபாயில் வளைகாப்பு நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண். 2007-ம் ஆண்டு வெளியான ‘சிறுத்தை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.அதன்பின் ஆரஞ்ச், ரச்சா, நாயக், ஜன்சீர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் ரீமேக்காக துருவா படத்தில் நடித்த ராம் சரண் மீண்டும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

Ramcharan

கடைசியாக தனது தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து ராம்சரண் நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ள ராம்சரண் ஆர்சி15 திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கும் புதிய பிரம்மாண்ட படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011-ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு குழந்தை பிறக்கபோவதாக நடிகரும் ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தெரிவித்திருந்தார்.

Ramcharan

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் உபாசனாவுக்கு துபாயில் ராம் சரண் வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்த்துள்ளார். இந்த விழாவில், இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு அனைவரும் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

From around the web