நானி படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா.. வைரலாகும் போஸ்டர்

 
Nani 31

நானி நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நானி, வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘தசரா’ கலவையான விமர்சனங்களை பெற்றன. 

SJ suryah

நானியின் 30வது படமாக ‘ஹாய் நான்னா’ படம் உருவாகி வருகிறது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடிக்கிறார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனிடையே நானியின் 31வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிப்பில் அடடே சுந்தரா படக்குழுவுடன் நானி மீண்டும் இணைகிறார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் நடிகர் நானியின் 31வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.


அண்மையில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பிலான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் விரைவில் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web