சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் பொங்கல் ரிலீஸ் இல்லை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
Ayalaan

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டைம் டிராவல் ஜானரில் மிகக் குறைவான பட்ஜெட்டில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கி தமிழ் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குநர் ரவிக்குமார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து  சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிக்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

Ayalaan

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரிலீஸாகாமல் தள்ளிபோடப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது. இப்படம் வருகிறது ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தற்போது ரிலீஸ் வேலைகளை படக்குழு மும்முரமாக செய்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருப்பதால் இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருந்தனர். தெலுங்கு மாநிலங்களில் முக்கியமான வசூல் ஏரியாக்கள் என்றால் அது நிஜாம் மற்றும் உத்திராந்திரா ஆகியவை தான். அந்த இரண்டு ஏரியாக்களிலும் அயலான் படத்திற்கான வெளியீட்டு உரிமையை புகழ்பெற்ற தெலுங்கு பட தயாரிப்பாளரான தில் ராஜு வாங்கி இருந்தார்.

தெலுங்கிலும் பொங்கல் பண்டிகைக்கு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், வெங்கடேஷ் நடித்த சைந்தவ், நாகார்ஜுனாவின் நா சாமி ரங்கா மற்றும் ஹனுமன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இதில் எந்த ஒரு படத்தில் ரிலீஸ் உரிமையையும் தில் ராஜு வாங்கவில்லை. ஆந்திராவில் தில் ராஜுவின் கட்டுப்பாட்டில் நிறைய திரையரங்குகள் இருக்கின்றன. அவர் நேரடி தெலுங்கு படங்களுக்கு போதுமான அளவு தியேட்டர்கள் கிடைப்பதை தடுக்கவே இப்படி அயலான் படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய உள்ளதாக சர்ச்சை வெடித்தது.

Ayalaan Captain Miller

அதேபோல் சமீபத்தில் ஹனுமன் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிரஞ்சீவி, கதை நன்றாக இருந்தால் பெரிய படங்களுக்கு மத்தியில் ரிலீஸாகும் சின்ன படங்கள் நன்றாக ஓடிவிடும் என தில் ராஜு பல வருடங்களுக்கு முன்னர் தன்னிடம் கூறியது பற்றி பேசினார். அவர் தில் ராஜுவை விமர்சிக்கும் விதமாக இந்த கருத்தை கூறியதாக பேச்சு எழத் தொடங்கியது. 

இந்த நிலையில், தான் அயலான் படத்தின் தெலுங்கு வெர்ஷனை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவில்லை என அறிவித்துள்ளார் தில் ராஜு. ஹனுமன் படத்தை நான் தடுக்கவில்லை. என்னை எதற்காக டார்ஜெட் செய்கிறார்கள் என தெரியவில்லை. மன உளைச்சலாக உள்ளது என கூறி உள்ளார். இதன்மூலம் அயலான் படம் தெலுங்கில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்பது உறுதியாகி உள்ளது. இதே நிலைதான் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web