மனைவியின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு அமரன் கெட்டப்பில் வந்து அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி அசத்தி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிய ‘அமரன்’ படத்தில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்தது. தற்போது வரை இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூலித்து பலரையும் வியக்க வைத்திருக்கிறது. 250 கோடி கிளப்பில் இணைந்த கோலிவுட் நடிகராக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார்.
இதை அடுத்து அமரன் பட கெட்டப்பில் தன்னுடைய மனைவிக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். அவருடைய மனைவி கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அமைதியாக சிவகார்த்திகேயன் நின்று கொண்டிருக்கிறார்.
திடீரென்று தனக்கு பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்து அவருடைய மனைவி ஆர்த்தி திரும்பி பார்க்கும்போது முதலில் அதிர்ச்சியாகி பிறகு கணவரை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைகிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்த நிலையில் இதுவல்லவா சர்ப்ரைஸ் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.