3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்.. வைரல் வீடியோ!

 
Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3-வது குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை ஈர்த்து, பலரது நெஞ்சங்களில் இடம் பிடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விலகும் இவர் அடுத்து இயக்குநராகவும் களமிறங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் சினிமாவில் நுழையும் முன்பே திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய சொந்த மாமா பொண்ணான ஆர்த்தியைதான் சிவகார்த்திகேயன் திருமணம் செய்துகொண்டார்.

Sivakarthikeyan

இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ஆராதனா. ஆராதனா தன்னுடைய 5 வயதிலேயே சினிமாவில் ‘கனா’ படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை பாடி இருக்கிறார். தற்போது ஆராதனாவுக்கு 11 வயது ஆகிறது. 2021-ம் ஆண்டு பிறந்த 2-வது குழந்தைக்கு குகன் தாஸ் என பெயரிட்டுள்ளனர். அவரை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செல்லமாக குட்டி எஸ்.கே. என அழைத்து வருகின்றனர். தற்போது குகன் தாஸுக்கு 3 வயது ஆகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 2-ம் தேதி சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை ஆண் குழந்தை ஆகும். சிவாவுக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க அந்தக் குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


அதன்படி பவன் சிவகார்த்திகேயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெயர் சூட்டு விழா சிவகார்த்திகேயனின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அதுதொடர்பான வீடியோவை சிவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

From around the web