கமலுடன் கைகோர்த்த சிம்பு... 48-வது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு!! இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு ஓபிலி கிருஷ்ணாவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த அறிவிப்பை சிலம்பரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ராஜ்கமல் நிறுவனம் புதிய வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தப் படம் வருகிற 2024-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_ @desingh_dp #STR48 #BLOODandBATTLE #RKFI56_STR48#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/nIcmVjrBHk
— Kamal Haasan (@ikamalhaasan) March 9, 2023
மேலும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “என் வாழ்க்கையின் கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் மதிப்புமிக்க RKFI-ன் கீழ் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றதற்காகவும், அவருக்கு ஒரு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்ததும் ஒரு கனவு நனவாகும் தருணம்.. அதிசயங்கள் நடக்கின்றன.” என பதிவிட்டுள்ளார்.