சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. பிரபலகளிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்!

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
2003-ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தார்த். தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் பல முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. காற்று வெளியிடை படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமான அதிதி ராவை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் நேற்று காலை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் நிச்சயம் செய்துக் கொள்ளப் போவதாக யாருக்கும் வெளிப்படுத்தாத நிலையில், தெலங்கானாவில் ரகசியமாக நிச்சயம் செய்துக் கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை அதிதி ராவ் யெஸ் சொன்னதும் நாங்க என்கேஜ்ட் என தற்போது க்யூட்டான போஸ்ட்டை போட்டு மோதிரம் மாட்டியுள்ள விரல்களை காண்பித்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளனர். மகாசமுத்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்ட நிலையில், தற்போது நிச்சயம் செய்துக் கொண்டனர்.
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் #AditiRaoHydari ஹாஷ்டேக்கை போட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதிகாரப்பூர்வமாக சித்தார்த் அறிவித்த நிலையில், அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
பாலிவுட் பிரபலங்கள் ஹீராமந்தி வெப்சீரிஸில் அதிதி ராவுடன் இணைந்து நடித்துள்ள நடிகைகள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் ராஷி கன்னா, குஷ்பு, அபர்ணா தாஸ், மஞ்சிமா மோகன், நிவேதிதா சதீஷ், சம்யுக்தா ஹெக்டே, கிஷன் தாஸ், திவ்யா சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். விரைவில் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.