இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. 4 வருட காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது! காரணம் என்ன?
நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவுடனான தனது 4 வருட காதலை முறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1992-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் 2000-ம் ஆண்டு வெளியான ‘ஹே ராம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனார். பின்னர் 2011-ல் ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததை அடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷய், அஜித், விஷால், தனுஷ் போன்றோர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கணிசமான படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் அவருக்கு வாய்ப்பு குறைந்ததை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்று அங்கு கணிசமான படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ‘இனிமேல்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுத, பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் இசையமைத்திருந்தார். இசையமைத்ததோடு மட்டுமன்றி அதில் நடித்தும், பாடியும் இருந்தார். அவருடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இதில் நடித்திருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றதை தொடர்ந்து, அவர் தொடர்ந்து தனது இசை பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது, இவர்கள் தங்களின் காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் தங்கியிருந்த இவர்கள், தற்போது ஒன்றாக இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நடிகை ஸ்ருதிஹாசனும் ஹசாரிகாவும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்து கொண்ட இவர்கள், தாங்கள் ஒன்றாக இருந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி விட்டதால் இவர்களின் காதல் முறிவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.
ஸ்ருதி ஹாசனும், சாந்தனுவுன் பிரிந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இருவருக்குள்ளும் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் இவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் டி.எம்மில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார், சாந்தனு. இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, ஸ்ருதி தான் எழுதிய ஒரு கவிதையை சாந்தனுவிற்கு அனுப்பியிருக்கிறார். இதை பார்த்த சாந்தனு, அந்த கவிதையை வைத்து ஒரு டூடுல் (Doodle-கிறுக்கல் வரைபடம்) செய்து அனுப்பியிருக்கிறார். இதை பார்த்து கவரப்பட்ட ஸ்ருதி, தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது நாளடைவில் காதலாக மாற, இருவரும் ஒரு கட்டத்தில் லிவ்-இன் உறவில் இருக்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, ஸ்ருதிக்கும் சாந்தனுவிற்கும் திருமணம் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இருவரையும் சந்தித்த ஒரு பாலிவுட் பிரபலம், ஸ்ருதி ஹாசனை சாந்தனுவின் மனைவி என்று கூறியதால் இந்த தகவல் பரவியது. ஆனால் ஸ்ருதி ஹாசன் தான் திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை எனவும் அப்படி ஏதேனும் நடந்தால் நானே வந்து அனைவரிடமும் கூறுகிறேன் என்றும் கூறினார். இதற்கு முன்னரே ஸ்ருதி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.