அதிகாலை மூச்சு திணறல்.. அஞ்சாதே பட நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 
sridar

அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்த ஸ்ரீதர் மூச்சு திணறல் காரணமாக இரவு 1.30 மணியளவில் காலமானார்.

2008-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘அஞ்சாதே’. இந்தப் படத்தில் நரேன் நாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்து இருந்தனர். பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இந்தப் படத்தில் கால் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் துணை நடிகர் ஸ்ரீதர் நடித்திருந்தார்.

dead-body

இந்தப் படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தை மிக எதார்த்தமாக நடித்திருந்தார். அவரின் அந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அது தவிர முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக இருமலால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதர், இன்று அதிகலை 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். ஸ்ரீதரின் மறைவு தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RIP

இதுவரை படங்களில் நடித்து வந்த ஸ்ரீதர் புதிதாக திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. இயக்குநராகும் கனவுடன் இருந்த அவர் திடீரென மறைந்துள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

From around the web