அதிர்ச்சி.. பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!

 
Prabha Atre

புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகர் டாக்டர். பிரபா ஆத்ரே காலமானார். அவருக்கு வயது 92.

இந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற “கிரானா கரானா” இசை பள்ளியைச் சேர்ந்த பிரபா ஆத்ரே, இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார். 1932-ம் ஆண்டு பிறந்த பிரபா ஆத்ரே, இசை கற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்து, இசைத்துறைக்குள் நுழைந்தவர்.

Prabha Atre

பன்முக ஆளுமை கொண்ட பிரபா ஆத்ரே, இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் அறிவியல், சட்டம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்று பன்முகங்களைக் கொண்ட ஆளுமையாக திகழ்ந்துள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்கு பின், அவர் அதிகாலை 5.30 மணியளவில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RIP

இவர் கடந்த 2022-ம் ஆண்டு இரண்டாவது உயரிய விருதான குடிமகன் விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002-ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web