அதிர்ச்சி.. மகன் மறைவை எப்படித் தாங்கிக் கொள்வார் பாரதிராஜா..

அடுத்தடுத்த அதிர்ச்சியாக கராத்தே வீரர் ஹுசைனி, இயக்குனர் பாரதிராஜா வின் மகன் மனோஜ் கே பாரதியின் மறைவு தமிழ்த்திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா இரங்கல் செய்தியை வீடியோவடிவில் வெளியிட்டுள்ளார். அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் இரங்கல் செய்தியில்”நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள்.
இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
#JUSTIN நடிகரும், இயக்குநருமான மனோஜின் மறைவுக்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ள இசைஞானி இளையராஜா#Ilaiyaraaja #ManojBharathiraja #RIP #News18tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/lmowX4ZRH7
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 25, 2025