அதிர்ச்சி.. 2 மகள்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்... விமானம் கடலில் விழுந்து விபத்து!

 
Christian Oliver

தனி விமானத்தில் தனது இரு செல்ல மகள்களுடன் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஓலிவர் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1994-ம் ஆண்டு வெளியான சேவ்ட் பை தி பெல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாவர் கிறிஸ்டியன் ஆலிவர். ஜியார்ஜ் க்ளூனி நடித்த குட் ஜெர்மன் படத்தில் நடித்து பிரபலமான இவர் 2008-ம் ஆண்டு வெளியான ஸ்பீடு ரேஸர் படத்தில் நடித்தும் பிரபலமானார். தொடர்ந்து இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Christian Oliver

51 வயதான கிறிஸ்டின் ஆலிவருக்கு ஜெசிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு அகிக் (10), மடிடா லிப்சர் (12) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

அந்த வகையில் நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம் மூலம் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கி புறப்பட்டார். புறப்பட சில நிமிடங்களில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் கிறிஸ்டின், மகள்கள் அகிக், மடிடா லிப்சர், விமானி ராபர்ட் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

RIP

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவரது மறைவிற்கு ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web