அதிர்ச்சி! பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி திடீர் மரணம்... பிரபலங்கள் இரங்கல்!!

 
Ajith SS Sakaravarthi

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 55.

1997-ல் அஜித் நடிப்பில் வெளியான ‘ராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி. அதனைத் தொடர்ந்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு உள்ளிட்ட படங்களில் தயாரித்துள்ளார். அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். 

அடுத்தடுத்த படங்களை தயாரித்த எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கும் அவரின் நண்பர் அஜித்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் தன்னுடைய மகன் ஜான் நாயகனாக நடித்த ரேனிகுண்டா என்ற திரைப்படத்தை தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. 

chakravarthi

இதைத்தொடர்ந்து மீண்டும் தன்னுடைய மகன் நடிப்பில் 18 வயசு படத்தை தயாரித்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதேபோல் சிம்பு நடிப்பில் தொடங்கிய வேட்டை மன்னன் திரைப்படமும் நிதி சிக்கல் காரணமாக பாதியிலேயே நின்றது.

இதனால் சினிமா தயாரிப்பில் இருந்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தி விலகி இருந்தார். இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பால் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவதியுற்றார்.

RIP

கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அவருக்கு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை எடுத்து வந்த  நிலையில் நள்ளிரவு  உயிரிழந்தார். அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web