அதிர்ச்சி! இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் திடீர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்

 
Pavalar Sivaraman

இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகனும், இசைக் கலைஞருமான பாவலர் சிவன் இன்று காலமானார். அவருக்கு வயது 60.

இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்பவர் இளையராஜா. இவரது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன். இவர், பாடகர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், நாடக எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இளையராஜாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973-ல் மறைந்தார். 

Pavalar SIvaraman

பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன். கிதார் இசைக்கலைஞரான இவர், இளையராஜாவின் குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சில படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். புதுச்சேரியில் வசித்து வந்த இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

இவரது மறைவு இளையராஜா குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாவலர் சிவனின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இவரின் மறைவுக்கு இசையமைப்பாளர் தீனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில், “இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ள்ளார்.

From around the web