அதிர்ச்சி! பிரபல நடிகரின் மனைவி மரணம்.. நடிகர் கமல் இரங்கல்!!

 
Crazy Mohan wife

பிரபல நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா கிரேஸி மோகனின் மனைவி நளினி நேற்று காலமானார்.

தமிழ் சினிமாவில் இருந்த முக்கியமான கலைஞர்களில் ஒருவர் கிரேஸி மோகன். இவர் நாடக கலைஞர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர். மேலும், திரைத்துறையில் கமல்ஹாசனுடன் நெருங்கிய நட்பிலிருந்தவர் கிரேஸி மோகன்.

RIP

கமலுக்கு இவர் வசனம் எழுதிய படங்களை இப்போது பார்த்தாலும் சிரிப்பு நிற்காமல் வரும். அப்படி பன்முக கலைஞராக இருந்த கிரேஸி மோகன் கடந்த 2019 ஜூன் 10-ம் தேதி காலமானார். கிரேஸி மோகன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அப்போது கமல் உடனேயே இருந்தார். மேலும், அவரது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கமல், தனது நண்பருக்குப் பிரியாவிடை கொடுத்தார்.

இந்த நிலையில், நேற்று கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web