அதிர்ச்சி! பிரபல நடிகரின் தாயார் மரணம்... இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!!
பிரபல நடிகர் ஜெகனின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
துணை நடிகரும் தொகுப்பாளருமான நடிகர் ஜெகன் விஜய் டிவியில் ‘கடவுள்பாதி மிருகம்பாதி’ என்ற நிகழ்ச்சியை வித்தியாசமான கெட்டப் போட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் வெள்ளித்திரையில் நுழையும் வாய்ப்பு கிடைத்து. இந்த வாய்ப்பை ஜெகன் சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரை,வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
2005-ம் ஆண்டு பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சத்தம் போடாதே, ஓரம் போ, பொறி போன்ற படங்களில் நடித்தார்.
2009-ம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்திருந்தார். பல நாட்கள் திரையரங்கில் ஓடி இத்திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெயன் பல படங்களில் கமிட்டாகினார். தொடர்ந்து, பையா, கோ, வல்லினம், வில் அம்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக நடிகர் பிரபு தேவா நடித்த பொய் கால் குதிரை படத்தில் நடித்திருந்த ஜெகன், தற்போது பல்லு படாம பாத்துக்கோ என்கிற படத்தில் நடித்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வெள்ளித்திரை மட்டுமில்லாமல் விஜய் டிவியிலும் ரன் பேபி ரன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ஜெகன் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், தனது தாயார் உயிரிழந்ததாக ஜெகன் கண்ணீருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய துக்கத்தில் பங்கேற்று ஆறுதல் கூறும் அனைவருக்கும் நன்றி. கடைசிவரை அம்மாவை மீட்க போராடிய மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார். இவருக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.