அதிர்ச்சி! நடிகர் மனோபாலா திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்!!

 
Manobala

இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

1982-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. அதனைத் தொடர்ந்து பிள்ளைநிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், 1994-ல் வெளியான ‘தாய்மாமன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Manobala

அதனைத் தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால், மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில படங்களை இவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் கூட சிரஞ்சீவியின் ’வால்டர் வீரய்யா’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RIP

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. மனோபாலாவின் மறைவு செய்தி கேட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

From around the web