அதிர்ச்சி! தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் காலமானார்.. இறுதி சடங்கு செய்தார் டி.இமான்!

 
Prabhu

தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரபு. இவர், 2009-ல் தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படம் உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் அவருடைய தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில், ரிச் பாய் போல் இவர் நடித்திருப்பார்.

Prabhu

பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த சமயத்தில், கிடைக்கும் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து, மது, புகையிலை, பாக்கு போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி செலவு செய்ததால், ஒரு நிலையில் புற்று நோய்க்கு ஆளானார். ஆரம்பத்தில் இது குறித்து அவருக்கு தெரியவில்லை என்றாலும், பின்னர் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனைகள் செய்த பின்னர், அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா சயமத்தில் திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல், புற்றுநோய்க்கு சிகிச்சையும் பெற முடியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பல பிரபலங்கள் இவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும் யாரிடமும் இவர் உதவியை நாடி செல்லவில்லை. மேலும் புற்றுநோய் காரணமாக ஆள் அடையாளம் தெரியாமல் உடல் மெலிந்து காணப்பட்ட பிரபுவை, எதேர்ச்சையாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த பழனி என்பவர் அடையாளம் கண்டு பேசியுள்ளார்.


பிரபு தன்னுடைய நிலையை கூறியதும், அவருக்கு மூன்று வேலை உணவு மற்றும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்தார். இதை தொடர்ந்து, பிரபுவின் நிலை குறித்து கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி.இமான் அவரின் மருத்துவச்செலவை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் புற்றுநோய் முற்றி விட்டதால் தற்காலிக சிகிச்சை மட்டுமே பிரபு எடுத்துக்கொண்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து பிரபுவின் உடலுக்கு இசையமைப்பாளர் டி இமான் இறுதிச் சடங்குகள் செய்து உடலை தகனம் செய்துள்ளார். டி.இமானின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

From around the web