அதிர்ச்சி! 6 மாதத்துக்கு முன் பிரபல நடிகர் மாயம்.. மனித உடல் கைப்பற்றி போலீசார்!!

 
Julian Sands

பிரபல இங்கிலாந்து நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (65) மாயமான இடத்தில் மனித உடல் கிடந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1982-ல் வெளியான ‘பிரைவேட்ஸ் ஆன் பரேட்’ படத்தின் மூலம் அறிமுகமானாவர் ஜூலியன் சாண்ட்ஸ். ஆக்ஸ்போர்டு ப்ளூஸ், தி கில்லிங் ஃபீல்ட்ஸ் போன்ற படங்களில் துணை வேடங்களில் தோன்றி தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பின், 1985-ல் வெளியான ‘எ ரூம் வித் எ வியூ’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து ஹாலிவுட்டில் கால்பதித்த அவர், ‘தி கில்லிங் ஃபீல்ட்ஸ்’, ‘வார்லாக்’, ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

Julian Sands

இந்த நிலையில் இவர் கடந்த ஜனவரி 13-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் மலையேற சென்றார். பின்னர் அவர் மாயமானார்.

அங்குள்ள மவுண்ட் பால்டி பகுதியில் கடைசியாக காணப்பட்ட அவர் எங்கு சென்றார் எனத்தெரியவில்லை. அவரை தேடும் பணியில் 80-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. மோசமான வானிலை மற்றும் கடுமையான பனிச்சரிவு காரணமாகத் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

police

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் அங்கு மலையேற சென்ற சிலர், ஒரு உடல் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜூலியன் சாண்ட்ஸ் மாயமான இடத்திலேயே அந்த உடல் கிடைத்ததால், அது அவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

From around the web