சிவராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு.!

 
Ghost

சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சாண்டல்வுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். இவர், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஜெயிலர் படத்துக்கு பின்னர் சிவராஜ்குமாரின் படங்களுக்கு தமிழ்நாட்டில் மௌசு அதிகரித்து உள்ளது. அவரின் கன்னட படங்களையெல்லாம் தேடிப்பிடித்து பார்த்து வரும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ‘கோஸ்ட்’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் விருந்து கொடுக்க ரெடியாகி உள்ளார்.

இந்தப் படத்தில் ஜெயராம், அனுபம் கேர், பிரசாந்த் நாராயணன், அர்ச்சனா ஜோயிஸ், சத்யபிரகாஷ் மற்றும் தத்தன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீனி இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். மேலும் இப்படம் பான் இந்தியா படமாக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தினை சந்தோஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Ghost

இந்த நிலையில் ‘கோஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரை எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.

‘யுத்தம் மனித குலத்துக்கு ஆறாத காயத்தை கொடுக்கும்’ என வசனத்துடன் தொடங்கும் டிரெய்லரில் சிவராஜ்குமார் இன்ட்ரோ கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படுகிறது. மாஸான காட்சிகளுடன் நடந்து வரும் சிவராஜ்குமார் ஈர்க்கிறார். துப்பாக்கிச்சத்தம் அதிகம் ஒலிக்கும் டிரெய்லரில் தோட்டாக்கள் தெறிக்கின்றன. 

ஜெயராமின் சர்ப்ரைஸ் தோற்றம் கவனம் பெறுகிறது. வன்முறை அதீதமாக கொண்ட ட்ரெய்லர் படத்தின் தரத்தை உணர்த்துவதோடு ‘மாஸ்’ ஆக்ஷன் என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கிறது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் ‘லியோ’ படமும் அதே நாள் வெளியாகிறது.

From around the web