ஷாலினி மருத்துவமனையில் அனுமதி.. அஜர்பைஜானில் இருந்து ஓடி வந்த அஜித்!

 
Shalini

நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஷாலினி, 1997-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமர்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமர்களம் படத்தில் நடித்த போது அஜித் ஷாலினியை காதலிக்க துவங்கினார். 

ஆரம்பத்தில் ஷாலினி இவரின் காதலை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினாலும் பின்னர் காதலை ஏற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலிக்க துவங்கிய சில வருடத்திலேயே பெற்றோர் சம்மதத்துடன், திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக, அஜித் - ஷாலினி ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

Shalini

இந்த நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை எடுத்து வருகிறார். அதனால் அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை கவனித்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இது சம்பந்தமான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் எப்போதும் உங்களை காதலிக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62-வது படமாக இது உருவாகி வருகிறது. இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

From around the web