மொட்டைத் தலையுடன் ஷாருக்கான்.. வெளியானது ஜவான் டிரெய்லர்! பிரிவ்யூ எப்படி?

 
Jawan

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகிறது.

Jawan

இந்தப் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வந்த நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை குறித்து ஷாருகான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு டிரெய்லரை வெளியிடவுள்ள படக்குழுவினர் அதற்க்கு ஜவான் பிரிவியூ ( Jawan Prevue) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு படத்தின் முன்னோட்டத்தை (Prevue) படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவே ராணுவ அதிகாரியாக அறிமுகமாகிறார் ஷாருக்கான். இன்னொரு காட்சியில் ஜேம்ஸ் பாண்ட் வில்லன் போல முகத்தில் முகமூடியுடன் ஒரு காட்சியில் அமர்ந்திருக்கிறார். இன்னொரு கெட்டப்-ல் உடல் முழுக்க கட்டு போல துணியை சுற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து காட்டப்படும் சண்டைக் காட்சிகள் ‘பதான்’ படத்தை நினைவூட்டுகின்றன. இறுதியில தலையில் கட்டுடன் மெட்ரோ ரயிலுக்குள் நுழையும் ஷாருக், கட்டை அவிழ்த்து மொட்டைத் தலையுடன் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

From around the web