மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ஷாருக்கான்?

 
SRK

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். 2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் ஆகிய 2 திரைப்படங்களும் 1,000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன. சமீபத்தில் உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அவர், தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

SRK

முன்னதாக அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 1 போட்டியை ஷாருக்கான் நேரடியாகக் கண்டுகளித்து, கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், நேற்று ஷாருக்கான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை திட்டமிட்டபடி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மேல் சிகிச்சைக்காக ஷாருக்கன் அமெரிக்கா சென்று உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

SRK

மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏன் சிகிச்சையை தொடரவில்லை?, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? மற்றும் ஏதேனும் தவறு நடந்ததா? என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

From around the web