திருப்பதியில் ஷாருக்கான்.. சுப்ரபாத சேவையில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம்.. வைரல் வீடியோ

 
SRK

திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை குடும்பத்துடன் நடிகர் ஷாருக்கான் வழிபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SRK

இந்த நிலையில் ‘ஜவான்’ திரைப்படம்  பெரும் வெற்றியடைய ஆசி வேண்டி அத்திரைப்படத்தின் கதாநாயகன் ஷாருக்கான், கதாநாயகி நயன்தாரா உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தனர். திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர்கள் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

இந்த நிலையில் முதன்முறையாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் நடிகர் ஷாருக்கான் வேஷ்டி சட்டை அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையான் கோவிலில் கொடிமரம் துவங்கி மூலவர் வரை எதையும் தவிர்க்காமல் கும்பிட்டு தன்னுடைய பக்தியை வெளிப்படுத்தினார். 


சாமி தரிசனத்திற்கு பின் கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். எனவே ஓட்டமும் நடையுமாக சென்ற அவர்கள் கார் ஏறி  அறைக்கு  வேகமாக புறப்பட்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web