பல கோடி... வெளிநாட்டு உரிமம் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா..?

 
Leo

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு உரிமையை, ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leo

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாத இறுதியுடன் படப்பிடிப்பு முடிவடையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் திரைப்படத்திற்கான வியாபார பணிகளை தயாரிப்பாளர் லலித் குமார் ஒருபுறம் கவனித்து வருகிறார். அதில் வெளிநாட்டு உரிமையை, ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் (Phars Films) என்ற நிறுவனத்துக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

Leo

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை முப்பது கோடிக்கு மேல் விற்பனையாகி இருந்தது. லியோ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை அதைவிட அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

From around the web