புயலில் கூட சீரியல் ஷூட்டிங்.. மகாநதி சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!

 
Mahanathi

மிக்ஜாம் புயலையும் பொருட்படுத்தாமல் விஜய் டிவி சீரியல் குழு ஷூட்டிங் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றுதான் ‘மகாநதி’. இந்த சீரியலின் கதை ஆரம்பத்தில் அப்பா மகள்களின் பாசத்தை மையமாகக் கொண்டு தொடங்கியது போன்று இருந்தது. பிறகு அப்பாவின் மரணத்திற்கு பிறகு மகள்கள் தங்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்கள் பிறகு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது போன்ற பாச உணர்வோடு போராட்டம் கலந்ததாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

Mahanathi

இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களும் வந்திருக்கிறது. ஏற்கனவே காவிரி நிதினை காதலித்து இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் பிரிந்து இருந்தனர். அதைத்தொடர்ந்து காவேரி விஜய்யோடு ஒரு வருட காண்ட்ராக்ட் திருமணம் செய்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் காதலில் ஒன்றிணைவார்களா? அல்லது பிரிவார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க இந்த உண்மை வெளியே வந்தால் அதை எப்படி இந்த இரு குடும்பமும் தாங்கி கொள்ளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

A post shared by Divya Ganesan (@divya_ganesan_official)

இந்த நிலையில் மகாநதி சீரியலின் ஷூட்டிங் நேற்று சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலையும் பொருட்படுத்தாமல் நடந்துள்ளது. இதுகுறித்த ஷூட்டிங் வீடியோ ஒன்றை, திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ளார். கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த, பிரதீப்பா இந்த சீரியலை விட்டு சமீபத்தில் விலகிய நிலையில், அவருக்கு பதில் கங்கா கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web