ஏங்கி ஏங்கி அழுது பிரபல நடிகை இறக்கும் முன் பதிவிட்ட பரபரப்பு வீடியோ.. அதிர்ச்சி தகவல்
நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மேரி ஜங் மேரா பைஸ்லா’ என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஆகான்க்சா துபே. அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.
இவர், தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான அகன்ஷா துபே (25) தூக்கு போட்ட நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில், அகன்ஷா துபேயின் முன்னாள் காதலர் அமர்சிங் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மக்களுடன் தான் பேசப்போவது இதுதான் கடைசி என்றும், தனது மரணத்திற்கு முன்னாள் காதலர் சமர்சிங் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Shocking video of Bhojpuri actress #akankshadubey surfaced, in which she is saying that whatever happens to her, Bhojpuri singer @samarsinghsh will be responsible. #AkankshaDubeySuicide #akansha_dubey#samarsingh https://t.co/b9kotfX75c pic.twitter.com/fbzzYaUgur
— Siraj Noorani (@sirajnoorani) April 20, 2023
சமர் சிங் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த வீடியோ உண்மையில் மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதா? அல்லது உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், சமர் சிங் உடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.