பிரபல சீரியல் நடிகைக்கு சீர்.. 5 மாத வளைகாப்பு.. வைரல் வீடியோ

 
Nakshatra

பிரபல சீரியல் நடிகை நக்‌ஷத்ரா கர்ப்பமாக உள்ள நிலையில், 5 மாத வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

2016-ல் வெளியான ‘2கிடாரி பூசாரி மகுடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நக்‌ஷத்ரா, பின்பு சீரியல் பக்கம் திரும்பினார். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அந்த சீரியலின் நாயகி நக்‌ஷத்ரா. அதன் பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கிய வள்ளித் திருமணம் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். 

nakshathra

இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்‌ஷத்ரா மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதுடன், திருமணத்திற்கு பின்பும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘வள்ளி திருமணம்’ என்கிற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வந்தார்.

குறித்த சீரியல் கடந்த டிசம்பர் மாதம் முடிந்த நிலையில், தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்த நட்சத்திராவிற்கு வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

A post shared by Nakshatra Viswanathan (@nakshathra_viswanathan)

நக்‌ஷத்ராவுக்கு 5 மாத சீர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. தற்போது இது குறித்த வீடியோக்களை நக்‌ஷத்ரா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

From around the web