சீமான் மட்டும் தான் டென்ஷன் இல்லாத அரசியல்வாதி.. கலாய்த்த இயக்குனர் பேரரசு!!

 
Perarasu Perarasu

அரசியல்வாதிகளில் எந்த டென்ஷனும் இல்லாத ஒரே ஒருவர் சீமான் மட்டுமே என்று இயக்குனர் பேரரசு கூறியுள்ளார். தேவயானியின் நிழற்குடை திரைப்பட ஆடியோ விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, “ சீமான் அண்ணன் கருப்புச் சட்டை போட்டிருக்கும் போது பார்த்திருக்கேன். இப்ப வெள்ளைக்கு மாறிட்டாரு. அண்ணே நீங்க எந்த கலர் சட்டை வேணும்னாலும் போட்டுக்கோங்க ஆனா கருப்பு மட்டும் வேண்டாம். கருப்பு டல்லடிக்கு. பிங்க் கலர் கூட போட்டுக்குங்க ஆனா கருப்பு மட்டும் வேண்டாம்.

அதியமான் சொன்னாரு அண்ணனுக்கு நிறைய வேலை இருக்கும் டென்ஷன் இருக்கும் என்று சொன்னாரு. சீமான் அண்ணன் யாரு கூடவும் கூட்டணி வச்சிக்க மாட்டாரு. எந்த டென்ஷனும் அவருக்கு இல்ல. கூட்டணி வச்சிருக்கவங்களுக்கு தான் டென்ஷன். நீங்க அடிக்கடி சினிமா விழாவுக்கு வாங்க. இது தான் உங்க தாய்வீடு. உங்களை உற்சாகப்படுத்தும் இடம்” என்று பேரரசு கூறியுள்ளார்.

From around the web