ஆகஸ்ட் 10-ம் தேதி தியேட்டரில சந்திப்போம்.. ‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் அப்டேட்.!

 
Jailer

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படம் குறித்த அதிரடியான அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் படம் ‘ஜெயிலர்’. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

jailer

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை இயக்குநர் நெல்சன் திலீப்குமார், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினருடன் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.


இந்த புகைப்படத்தில் ரஜினி தம்ஸ் சிம்பிளுடன் செம்ம எனர்ஜிட்டிக்காக உள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்பவே படத்தின் ரிசல்ட் தெரிவதாக, படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என்றும் உற்சாகத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From around the web