ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

 
kriti kharbanda

படப்பிடிப்புக்காக ஹோட்டல் ஒன்றில் தங்கியபோது அங்கே ரகசிய கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நடிகை கிரித்தி

2009-ல் வெளியான ‘போனி’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் கிரித்தி கர்பாந்த். அதனைத் தொடர்ந்து டீன் மார், திரு.நூக்கையா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் வெளியான ‘புரூஸ் லீ’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

kriti kharbanda

இந்த நிலையில் கன்னட படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்றபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து கிரித்தி கர்பந்தா அளித்துள்ள பேட்டியில், “நான் தங்கி இருந்த ஓட்டல் அறையில் ஒருமுறை ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்தேன். நான் நடித்த கன்னட படத்தின் படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கியபோது இந்த சம்பவம் நடந்தது. அதை பார்த்து பயந்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

ஓட்டலில் வேலை செய்த ஒருவர்தான் அந்த ரகசிய கேமராவை எனது அறையில் பொருத்தி இருக்கிறார். பொதுவாக நான் தங்கும் அறையை அடிக்கடி சோதனை செய்து கொள்வது வழக்கம். அப்படி செய்தபோதுதான் எனது அறைக்குள் ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடித்தேன்.

kriti kharbanda

செட்டாப் பாக்ஸ் பின்புறம் யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக அது மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. நடிகைகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினைகள் வருகின்றன என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. இப்போது வெளியே எங்கேயாவது தங்க நேர்ந்தால் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்றார்.

From around the web