கேரவனில் ரகசிய கேமரா..? நடிகை ராதிகா பரபரப்பு குற்றசாட்டு!
மலையாள படப்பிடிப்பின்போது கேரவனில் ரகசிய கேமராவை வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை ஆண்கள் பார்த்ததாக நடிகை ராதிகா கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகர்கள், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பற்றி எரிய தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. 2019-ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாஃபியாக்களின் கையில் இருக்கிறது. அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிக முறை காட்சிப்படுத்தப்படுத்துவது. செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசுவது உள்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் வெளியான நிலையில் ஒவ்வொரு நடிகைகளும் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக கூறி வருகின்றன. இதனால் நாள்தோறும் இந்த விவகாரம் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து போலீஸ் ஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை ராதிகாவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகை ராதிகா பேட்டி அளித்திருந்தார் “ கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துகொண்டு இருந்தார்கள். மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது இது நடந்தது. இதை அங்கிருந்த ஆண்கள் போனில் பார்த்துகொண்டு சிரித்துகொண்டிருந்தார்கள். இந்நிலையில் இது தெரிந்து ஹோட்டல் அறையில் நான் உடை மாற்றினேன். இதைத்தொடர்ந்து கேரவனில் உள்ளவர்களை செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்தேன். பல நடிகைகள், தன்னிடம் தவறாக நடந்துகொள்வார்கள் என்று பயந்து என் அறையில் தங்கிக்கொள்வார்கள் ” என்று கூறினார்.
இதனை அடிப்படையாக கொண்டு முதலில் இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பது பற்றிய விவரங்களை சேகரிக்க விசாரணை குழு முடிவெடுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து தேவைப்பட்டால், நடிகை ராதிகாவிடம், நேரில் விசாரணை நடத்தவோ, வாக்குமூலம் பெறவோ திட்டமிடப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது. ராதிகா பகிர்ந்துள்ள இந்த தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.