ரஜினியின் கூலி படத்தை பார்த்து விட்ட சந்திப் கிஷன்! படம் எப்படி இருக்கு?

 
Sandeep Kishan

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.  இதில் சத்யராஜ், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் ஷாயிர், ஸ்ருதி ஹாசன்,  உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் ஆமிர்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார். பூஜா ஹெக்டே பாடல் ஒன்றில் சிறப்பு நடனம் ஆடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கூலி படத்தின் 45 நிமிட காட்சிகளைப் பார்த்து விட்டதாகவும் படம் பட்டையை கிளப்புகிறது, ஆயிரம் கோடி வசூலைத் தாண்டும் என்று தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் சந்திப் கிஷன் கூறியுள்ளார். தனுஷுடன் கேப்டன் மில்லர், ராயன் படங்களில் நடித்திருந்தார் சந்திப் கிஷன். தெலுங்குப் படங்களிலில் முன்னணி ஹீரோவாகவும் இருந்து வருகிறார். தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்துள்ள சந்திப் கிஷன், தான் ஒரு காட்சியில் கூட கூலி படத்தில் நடிக்கவில்லை என்றும், லோகேஷ் கனகராஜ் நண்பர் என்பதால் கூலி படத்தின் காட்சிகளைப் போட்டுக் காட்டினார் என்றும் தெரிவித்துள்ளார்.