சமுத்திரக்கனி நடிக்கும் ‘விமானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

 
Vimaanam

சமுத்திக்கனி நடிக்கும் ‘விமானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

2003-ல் வெளியான ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமுத்திக்கனி. அதனைத் தொடர்ந்து நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து நடிகரானவர்களில் சம காலங்களில் மிக முக்கியமானவர் சமுத்திரக்கனி. அவர் இல்லாத படங்களே இல்லை, ஏற்காத கேரக்டர்களே இல்லை என்னும் அளவுக்கு எந்த கேரக்டரை கொடுத்தாலும் சிறப்பாக செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெறுவார். அந்த வகையில் தற்போது  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘விமானம்’ படத்தில் நடித்துள்ளார். 

Vimaanam

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சிவபிரசாத் யானலா இயக்கியுள்ளார். இப்படத்தில் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், மொட்டை ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசை அமைத்திருக்கிறார். 

இந்த நிலையில், விமானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழு நேற்று (ஏப்.14) வெளியிட்டது. விமானத்தில் பறக்க விரும்பும் மகனின் ஆசையை, மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் தந்தை எவ்வாறு கையாண்டார்? மகனின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதுதான் கதை என்று தெரிகிறது. 


இப்படம் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், உணர்வுப் பூர்வமாகவும், பார்வையாளர்களுக்கு விமான பயணத்தை அளிக்கும் வகையிலும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.    

From around the web