படப்பிடிப்புக்கு இடையே சாமி தரிசனம்.. அண்ணாமலையார் கோவிலில் சூப்பர் ஸ்டார்.. வைரல் வீடியோ!

 
Rajinikanth

‘லால் சலாம்’ படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாக நடந்து வந்தது. 

Rajinikanth

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘லால் சலாம்’ படக்குழு திருவண்ணாமலை வந்தடைந்தனர். தற்போது அங்கு சூட்டிங் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்தை காண அவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் சூட்டிங் நடந்த இடத்தில் குவிந்தனர்.

இதனால் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டு, பின் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள், மன மகிழ்ச்சியில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் படத்தில் நிரோஷா, ஜீவிதா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கிறார்.


இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு நடுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்து திரும்பினார். கோயில் நிர்வாக ஊழியர்கள் அவருக்கு சிறந்த வரவேற்பு அளித்து, மரியாதை செலுத்தினர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web