சமந்தாவுக்கு ஏற்பட்ட புது பிரச்சனை.. இதுக்கும் தனி ட்ரீட்மெண்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு மருந்துகள் மூலம் அதிக ஸ்டிராய்டு எடுத்து கொண்டதால் புதிய பிரச்னையை சந்தித்து வருவதாக அதிர்ச்சி தகவலை நடிகை சமந்தா கூறியுள்ளார்.
2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இதனை தொடர்ந்து அந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாகவே சமந்தாவிற்கு அமைந்தது. ஜிம் ஒர்கவுட்டில் மரண மாஸ் காட்ட தொடங்கிய சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார். சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் அவர் மனதளவிலும் சோர்ந்திருந்த நிலையில், நடித்து வந்த ‘குஷி’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் குணமடைந்த பின், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மீண்டும் நடித்தார் சமந்தா.
தற்போது சமந்தா மயோசிட்டிஸ் சிகிச்சையில் இருக்கும் நிலையில், சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். பின்தொடர்பவர்களில் ஒருவர் சமந்தாவின் சருமம் பற்றி அவரிடம் கேட்டார். மேலும் அவர் மயோசிடிஸ் சிகிச்சைக்காக எடுக்க வேண்டிய ஸ்டீராய்டு ஷாட்களின் காரணமாக அவரது தோலின் தன்மை மாறிவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
தோலில் Pigmentation அதிகம் இருப்பதால், அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என சமந்தா கூறியுள்ளார். சமந்தாவின் இந்த Pigmentation பிரச்சனை... மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடைந்த பின்னர், துவங்கும் என கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு சின்மயி தான் சமந்தாவுக்கு உதவ உள்ளாராம். ரசிகர்கள் விரைந்து உங்களின் பிரச்சனைகள் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக கூறி வருகிறார்கள்.