திருமண ஆடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. காரணம் என்ன தெரியுமா?

 
Samantha

திருமணத்தின் போது தான் அணிந்திருந்த ஆடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா மாற்றியமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

Samantha

இந்நிலையில், திருமணத்தின்போது, தான் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையை தற்போது, கருப்பு நிறத்திற்கு சமந்தா மாற்றியுள்ளார். திருமணத்தின் போது கவுன் வடிவில் இருந்த ஆடையை தற்போது வேறு விதமாகவும் மாற்றியுள்ளார். இந்த ஆடை மாற்றம் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற மனப்பூர்வமாக தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு சிறிய மாற்றமும், தீர்க்கமான முடிவுகளும் முக்கியமானது எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். வெட்டிங் கவுனை மாற்றிய சமந்தாவின் முடிவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

A post shared by Krésha Bajaj (@kreshabajajofficial)

சினிமா துறையில்  தனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்க்கைமுறையை முன்னெடுத்து, பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் சமந்தாவுக்கு Elle (India) மேகசின் ’ELLE Leaders of Change, Female’ என்ற விருதை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

From around the web