தங்கையின் திருமண நிச்சயத்தில் டான்ஸ் ஆடிய சாய் பல்லவி... வைரல் வீடியோ!

 
Sai Pallavi

நடிகை சாய் பல்லவி தனது தங்கைத் திருமண நிச்சயத்தில் படுகா நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் முதன் முறையாக 2005-ம் ஆண்டு வெளியாகிய ‘கஸ்தூரி மான்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய ‘தாம் தூம்’ படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

பின்னர், மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனங்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அதையடுத்து 2017-ம் ஆண்டு வெளியான ஃபிதா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், மாரி 2 படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.

Sai-Pallavi

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே21 படத்திலும், தண்டல் என்ற தெலுங்கு படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார். சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். இவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘சித்திரை செவ்வானம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது அக்காவவை போலவே தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே படத்துடன் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.

எனினும் பூஜா கண்ணன் தொடர்ந்து சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த சூழலில் பூஜா கண்ணன் தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ளார். இதுவரை தனது கிரைம் பார்ட்னராக இருந்த வினீத் விரைவில் தனது லைஃப் பார்டனராக மாற உள்ளதாகவும் பூஜா கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தானும் வினீத்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.


இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகை சாய்பல்லவி தனது குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடி உள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web