சோகம்.. பிரபல இளம் நடிகை  மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

 
Lakshmika Sajeevan

இளம் மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 24.

காக்கா என்ற குறும்படத்தின் மூலம் பெயர் பெற்ற திரைப்பட நடிகை லக்ஷ்மிகா சஜேவன். கேரள மாநிலம் பள்ளுருத்தி, கொச்சி கச்சேரிப்பாடி வாழவெளியைச் சேர்ந்த சஜீவ் - லிமிதா தம்பதியரின் மகள். இவர் ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

Lakshmika Sajeevan

சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிப்பில் கவனம் செலுத்தினார். மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த ‘சவுதி வெள்ளக்கா’, 'உயரே’ போன்ற படங்களிலும் இவர் நடித்துப் புகழ்பெற்றார். இந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் இறந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வங்கியில் பணிபுரிந்து வந்தபோது இவருக்கு இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இளம் வயதில் மாரடைப்பால் இறந்துள்ளது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

RIP

அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், உயரமான கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அடிவானத்திற்கு எதிராக ஒரு நீர்நிலையின் நிழற்படங்களை வார்ப்பது, அமைதியான சூரிய உதயம் ஆகியவற்றைக் காட்டியது. படத்துடன், ஒரு கசப்பான தலைப்பு: "நம்பிக்கை 🍀ஒளி இருள் இருந்தாலும்...(sic)." ரசிகர்களின் இதயப்பூர்வமான செய்திகள், இப்போது அவரது நித்திய அமைதிக்கான வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றன.

From around the web