ரூ. 250 கோடி சொத்துக்காக திருமணம் செய்து கொண்ட நடிகர் பாலா.. பொண்ணு யாரு தெரியுமா?

தனது தாய் மாமன் மகளை நடிகர் பாலா இன்று திருமணம் செய்து கொண்டார்.
2003-ம் ஆண்டு வெளியான ‘அன்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பாலா. அதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவரால் நிலைக்க முடியவில்லை. இதையடுத்து மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய பாலாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளும் வாய்ப்புகளும் குவிந்தன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இந்ந நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார் பாலா. அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். 2012-ம் ஆண்டு அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். அடுத்து டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் பின்தொடர்ந்து பாலா துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், எர்ணாகுளத்திலுள்ள எடப்பள்ளி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கேரள போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது தாய் மாமன் மகளான கோகிலா என்பவரை நடிகர் பாலா இன்று திருமணம் செய்துகொண்டார். எர்ணாகுளத்தில் உள்ள பாவகுளம் கோயிலில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் இந்த திருமணம் செய்து கொள்வதாக பாலா தெரிவித்தார்.
നടൻ ബാല വീണ്ടും വിവാഹിതനായി. ബന്ധുവായ കോകിലയാണ് വധു. കൊച്ചിയിലെ ക്ഷേത്രത്തിൽ വച്ചായിരുന്നു വിവാഹം#ActorBala #bala #marriage #actor #kochi #malayalamcinema pic.twitter.com/V3d7SPg9rP
— MovieVerienz (@prankkuuzz) October 23, 2024
மேலும் தனது திருமணம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிடும்போது, “கோகிலா என்னுடைய உறவினர். 74 வயதான என்னடைய தாயார் திருமணத்தில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்த ஆசைப்பட்டார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது. கடந்த காலங்களில் என் மீதும், என் உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு உறுதுணையாக இருந்தார். அவரால் தான் என்னுடைய உடல்நலன் மேம்பட்டது” என தெரிவித்துள்ளார்.