ஹாலிவுட்டில் கலக்கும் RRR... 4 விருதுகளை வென்றது ஆர்ஆர்ஆர்!

 
RRR

ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 4 விருதுகளை அள்ளியுள்ளது.

நான் ஈ, மகதீரா, பாகுபலி ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலியின் அடுத்த படைப்பான ‘ஆர்ஆர்ஆர்’ படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர். 

இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

RRR

கோல்டன் குளோப் விருது விழாவில் இரு விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் பாடலுக்காக வென்ற நிலையில், ஆஸ்கர் நாமினேஷனில் நாட்டுக் கூத்து பாடல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருது விழாவில் சிறந்த ஸ்டன்ட் மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த பாடல் மற்றும் சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம் என 4 விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் தட்டித் தூக்கி உள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழா முடிந்த பின்னர் தான் ராஜமெளலி தனது டீமுடன் ஹைதராபாத் திரும்ப உள்ளார். ஆஸ்கர் விருது விழாவில் 24 பிரிவுகளுக்கு விருது வழங்கப்படும் நிலையில், சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது பிரிவே ஆஸ்கரில் இல்லை. ஆனால், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் நடத்தும் இந்த விருது விழாவில் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான பிரிவு உள்ளது.

RRR

அந்த பிரிவில் பல ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு ஆர்ஆர்ஆர் திரைப்படம் விருதை கைப்பற்றி உள்ளது. ஸ்டண்ட்டுக்கு மட்டுமின்றி சிறந்த சர்வதேச திரைப்பட விருதையும் எச்சிஏ விருது விழாவில் வென்று இந்திய ரசிகர்களை பெருமைக்கொள்ளச் செய்துள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம். இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த பாடல் நாட்டுக் கூத்து, சிறந்த ஸ்டன்ட் மற்றும் சிறந்த ஆக்‌ஷன் படம் என ஒட்டுமொத்தமாக 4 ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்று மாஸ் காட்டியுள்ளது. சர்வதேச அரங்கில் இதுவரை அதிக விருதுகளை இந்த முறை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் பிரிவில் ஆர்ஆர்ஆர் நாமினேட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்கரில் அந்த படம் நாமினேட் ஆகவில்லை.

RRR

அதற்கு பதிலாக சிறந்த பாடல் பிரிவில் மட்டும் நாட்டுக் கூத்து பாடல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கம் நடத்தும் இந்த விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்பட விருதையே ஆர்ஆர்ஆர் வென்று கெத்துக் காட்டி உள்ளது. வரும் மார்ச் 13-ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள ஆஸ்கர் விருது விழாவில் ஒரு பிரிவில் நாமினேட் ஆகி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் வெற்றிப் பெற்றால், இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வக்காண்டா ஃபாரெவர் பாடல் மட்டுமே ஆர்ஆர்ஆர் நாட்டுக் கூத்து பாடலுக்கு கடும் போட்டியாக உள்ளதாக கூறுகின்றனர்.

From around the web