சூர்யா மீது ரொமான்ஸ் வழிந்தது.. அடுத்த ஜென்மத்துல எனக்கு சூர்யா புருஷனா வேணும்.. சுசித்ராவின் ஏக்கம்!
அடுத்த ஜென்மத்துல எனக்கு சூர்யா புருஷனா வேணும் என்று பிரபல பாடகி சுசித்ரா பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி பாடகி, பத்திரிகையாளர், ஆர்ஜே, நடிகை என்று பன்முகங்களை கொண்டவர் சுசித்ரா. யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவரும் அவர், பல சமயங்களில் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன. அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். மேலும் நடிகை ரீமா கல்லிங்கலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ரெட் டாக்கீஸ் என்ற யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா பேட்டி அளித்தார்.
அவர் அளித்த பேட்டியில், “எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது சூர்யா புருஷனாக வர வேண்டும் என்று நினைத்தேன். நானும் அவரும் ஆயுத எழுத்து படத்தில் இணைந்து நடித்தோம். அந்த சமயத்தில் சூர்யாவை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். அதனை மணிரத்னம் பார்த்து திட்டிக்கொண்டே இருப்பார். படத்தின் ஒரு சீனில் சூர்யா ஒரு டயலாக்கை அவ்வளவு ஃபோர்ஸாக பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு பின்னால் இருக்கும் நாங்கள் அழுத்தத்தில் இருப்பதுபோல் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். ஆனால் சூர்யாவை முன் வைத்துக்கொண்டு என்னால் அப்படி இருக்கவே முடியவில்லை.
எனது கண்கள் அவரை ரசித்துக்கொண்டே இருந்தன. ரொமான்ஸ் வழிந்துகொண்டிருந்தது. மணிரத்னம் அதனை கண்டுபிடித்தாலும் சூர்யாவை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு அவரது கண்கள் அவ்வளவு பிடிக்கும். அவ்வளவு அழகு அவரது கண்கள். என்னால் என்னை கன்ட்ரோல் செய்ய முடியாததால் அந்த சீன் எடுக்கும்போது பல டேக்குகள் சென்றன. ஒருகட்டத்தில் மணிரத்னம், என்னிடம் 'நீ குனிந்துகொள். நான் உன்னுடைய தலையை வைத்து எடுத்துக்கொள்கிறேன். டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
ஒருகட்டத்தில் சூர்யா மீது இருந்த அன்பால் அவரது வீட்டுக்கு சென்று மாப்பிள்ளை கேட்கலாமா என்றுகூட யோசித்தேன். அவர்கள் பெரிய குடும்பம். ஆனால் நான் அப்படி சென்றால் என்னை சிவகுமார் கேவலமாக திட்டி யார் வீட்டுக்கு வந்து என்ன கேட்கிறாய் என்று என்னை வெளியே அனுப்பியிருப்பார் என்று நன்றாகவே தெரியும். அதனால் அன்றைய இரவே அந்தக் காதலை குழி தோண்டி புதைத்து சமாதி கட்டிவிட்டேன்” என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் சுசித்ராவுக்கு சூர்யா மீது இவ்வளவு லவ்வா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
• Exclusive : " @Suriya_offl is my crush at the time & I desire to marry him but they are big family so, that very night, I buried that love by digging a grave nd built a tomb over it... "
— Sri (@sridhar_Offl) September 28, 2024
- Suchitra pic.twitter.com/RllPOX1Ylj
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே ஜோதிகாவும், சூர்யாவும் இப்போது மும்பையில் செட்டில் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.