மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட இடத்துல டான்ஸ் ஆடிய ரோஜா.. வலுக்கும் எதிர்ப்புகள்!

 
Roja

புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அமைச்சர் ஒருவர் மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்த்து. கனமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து குடிநீர், மின்சாரம் வழங்கப்படாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பலரும்  மீட்பு பணிகளிலும், நிவாரண உதவிகளை செய்வதிலும் ஈடுபட்டு வந்த போது, நடிகையும், ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாவும் களப்பணியில் ஈடுபட்டார். புத்தூர் பேரூராட்சி பிள்ளாரிப்பட்டு அலுவலகம் தா்மாம்பா புரத்தில் கனமழை பெய்து கொண்டிருந்த போது ரோஜா குடையை கைகளில் வைத்தபடி மழையில் நடனமாடியபடி மழையை ரசித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

Roja

புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அமைச்சர் ஒருவர் மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம். ஆனால் ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என கடுமையாக தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறது.


இதையடுத்து ரோஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மழையை ரசிக்கிறது எல்லாம் தப்பே கிடையாது தான். ஆனா, வீட்டை இழந்து, தங்கள் உடைமைகளையும் இழந்து, அடிப்படை வாழ்வாதாரம் இல்லாமல் நிர்கதியாய், நீங்கள் தருகிற ரொட்டி துண்டுகளையும், பால் பாக்கெட்டுகளையும் எதிர்பார்த்து காத்திருக்கிற மக்களைப் பார்த்தும், அந்த நிமிஷத்துல மழையை ரசிக்க உங்களால முடியும் என்றால் நீங்கள் மனித பிறவியே கிடையாது... அரசியலுக்கு முழுக்க தகுதியானவர் நீங்கள் தான் என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web