தளபதியுடன் புரட்சி தளபதி... மார்க் ஆண்டனி படத்தின் டீசரை பார்த்து பாராட்டிய விஜய்! வைரல் போட்டோஸ்!!

 
Vijay Vishal
மார்க் ஆண்டனி படத்தின் டீசரை பார்த்த நடிகர் விஜய் படக்குழுவினரை பாராட்டி உள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும்.இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.
Vijay
இந்தப் படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர். 
இந்த நிலையில் நடிகர் விஜய்யை விஷால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.
அப்போது நடிகர் விஜய்க்கு மார்க் ஆண்டனி டீசரை படக்குழுவினர் காண்பித்துள்ளனர். இதனையடுத்து, டீசர் நன்றாக இருப்பதாக விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.


 

இந்த நிலையில் நடிகர் விஜய்யை சந்தித்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், எனது அன்பிற்குரிய சகோதரரும், ஹீரோவுமான விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னுடைய டீசரை பார்த்ததற்கு நன்றி. எப்பொழுதும் உங்களது ரசிகனாக இருப்பது எனக்கு பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web