இளையராஜாவுக்கு மரியாதை!! சிறப்பு நடனமாடிய ரஷ்ய நடனக் கலைஞர்கள்!!
Updated: Feb 2, 2025, 21:14 IST

இசைஞானி இளையராஜாவின் இசைக்கூடத்திற்கு நேரடியாக வந்த ரஷ்யா நாட்டின் நடனக்கலைஞர்கள் அவருக்கு மரியாதை செய்ததுடன் இசைஞானியின் பாடல்களுக்கு சிறப்பு நடனமும் ஆடியுள்ளனர்.
சென்னையில் உள்ள இளையராஜா இசைக்கூடத்திற்கு ரஷ்யா நாட்டின் நடனக்கலைஞர்கள் வந்திருந்தனர். இளையராஜா இசையமைத்த மீரா படத்தின் ஓ பட்டர்ஃப்ளை மற்றும் சிறைச்சாலை படத்தின் பூவே செம்பூவே பாடல்களுக்கு நடனமாடி இளையராஜாவின் இசையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இது குறித்த தகவலை நடனக் காட்சியுடன் இளையராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.